. .இன்று நண்பர் ஓசை செல்லா அவர்கள் பதிவில்
<<
1. மனித இனம் குகைமனிதனாக இருந்தபோது ஆரோக்கியமானவனாக இருந்தான்.
( தவறு. அவனது சராசரி ஆயுட்காலம் என்ன? )
>>
என்று உள்ளது
-oOo-
இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா ? விரிவாக பார்க்கலாம்
-oOo-
சராசரி ஆயுள்காலம் என்பது பல வித காரணிகளால் தீர்மாணிக்கப்படுகிறது
அதில் உணவும் ஒரு காரணம்
அதை தவிர பிற காரணங்கள் நிறைய உள்ளன
இந்த காரணங்களை
1. உணவு
2. உணவு தவிர்த்த பிற காரணங்கள் (விஞ்ஞான வளர்ச்சி, நவீன விஞ்ஞான மருத்துவம்)
-oOo-
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்
மனித இனம் குகைமனிதனாக இருந்தபோது ஆரோக்கியமானவனாக இருந்தான் என்பது தவறு
அன்றை விட இன்று மனிதன் பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறான்
கிமு 20000த்தில் இருந்ததை விட கிமு 10000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 10000த்தில் இருந்ததை விட கிமு 5000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 50000த்தில் இருந்ததை விட கிமு 2000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 2000த்தில் இருந்ததை விட கிமு 1000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 1000த்தில் இருந்ததை விட கிமு 500ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 500த்தில் இருந்ததை விட கிமு 100ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிமு 100த்தில் இருந்ததை விட கிபி 100ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிபி 100த்தில் இருந்ததை விட கிபி 1000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிபி 1000த்தில் இருந்ததை விட கிபி 1900ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிபி 1900த்தில் இருந்ததை விட கிபி 2000ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
கிபி 2000த்தில் இருந்ததை விட கிபி 2010ல் மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்
எனவே
அந்த காலத்தில் மனிதன் ஆரோக்கியம் என்று கூறுபவர்கள் எல்லாம் மூளை சிறிதும் அற்ற மூடர்கள் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது
-oOo-
ஆனால்
அன்றை விட இன்று மனிதன் பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதை வைத்து, அன்றைய உணவை விட இன்றைய உணவு சிறந்தது என்ற முடிவிற்கு வருவது பெரும்பிழை
காரணம்
ஆரோக்கியத்திற்கு உணவு எப்படி ஒரு காரணமோ, அதே போல் பிற காரணங்களும் உள்ளன . . . .இன்று மனிதனின் சராசரி ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரித்தற்கு காரணம் உணவு அல்ல . . .
இன்று மனிதனின் சராசரி ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரித்தற்கு தடுப்பூசிகளும், நவீன விஞ்ஞான மருத்துவர்களும் தான் காரணமே தவிர இன்று சாப்பிடும் அதீத மாவுச்சத்து உணவு காரணம் அல்ல
-oOo-
இப்பொழுது நமது கேள்வி
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில்
இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவத்தில்
மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு அல்லது மாவுச்சத்து குறைவாக உள்ள உணவு, இதில் எது ஆரோக்கியம் என்றால்
மாவுச்சத்து குறைவாக உள்ள உணவே ஆரோக்கியமானது
-oOo-
நீட்டி முழங்காமல் இரண்டே வரியில் சொல்வது என்றால்
பேலியோ காலத்தை விட 2016ல் அதீதமாவுச்சத்து சாப்பிடும் நகரவாசி ஆரோக்கியமாக உள்ளான்
2016ல் அதீதமாவுச்சத்து சாப்பிடும் நகரவாசியை விட 2016ல் மாவுச்சத்து குறைவாக சாப்பிடுபவன் மேலும் ஆரோக்கியமாக உள்ளான்
அம்புட்டுத்தான் !!
No comments:
Post a Comment