//
But, Dr Mariano Anto Bruno Mascarenhas , my doubt is as insulin is a very important anabolic hormone and plays a very vital role in protein synthesis from amino acids , won't the decreased insulin also lead onto less protein production and more proteolysis?
//
இல்லை
உண்மையில்
இன்சுலினின் முதன்மை நோக்கம் Anabolism தான்
இன்சுலினின் ஒரு பக்க விளைவு தான் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை குறைப்பது. அது முதன்மை விளைவு கிடையாது
சொல்லப்போனால்
இரத்தத்தில் குளுக்கோசை குறைக்கும் இயக்குநீர்கள் (hormones) மிகக்குறைவே
இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்கள் தான் உடலில் அதிகம்
ஏன்
காரணம்
நமது உடல் மாவு சத்து சாப்பிட ஏதுவானது அல்ல்
நமது உடல் புரதம் மற்றும் கொழுப்பு சத்து உண்ண ஏதுவானது
மனிதனின் பரிணாம வளர்ச்சியில்
நாம் மாவுச்சத்து உண்பது மிகவும் சமீபத்தில் தான்
(அதாவது விவசாயம் வந்த பிறகு தான்)
-oOo-
இப்படி மாவுச்சத்து உண்ணும் போது என்ன ஆகிறது
இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது
எனவே
அதை குறைக்க இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது
இப்படியே தினமும் அதிகப்படியாக இன்சுலின் சுரந்தால் என்ன ஆகும்
-oOo-
ஒரு ஊர் உள்ளது
அங்கு ஒரு குளம் உள்ளது
அந்த ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கும் போதுமான நீர் அந்த குளத்தில் இருந்து கிடைக்கும்
அந்த ஊருக்கும் ஒரு கோலா கம்பெனி வந்து போர் போட்டு நீர் எடுத்தால் என்ன ஆகும்
குளம் வற்றி விடும்
-oOo-
அதே போல்
நாம் மாவுச்சத்து சாப்பிடும் போது
நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது
நிறைய இன்சுலின் சுரக்கிறது
கொஞ்ச நாட்களில் கணையத்தில் இருக்கும் சுரக்கும் சக்தி குறைந்து விடுகிறது
அப்படி குறையும் போது, முதலில் கணையத்தின் சுரக்கும் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் சாப்பபிடுகிறார்கள்
பிறகு
அதுவும் செல்லுபடியாகாமல் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை வருகிறது
-oOo-
குளம் வற்றினால், லாரியில் நீர் கொண்டு வர வேண்டுமே, அது போல்
-oOo-
நாம் மாவுச்சத்து சாப்பிடாவிட்டால்
நமக்கு தேவையான இன்சுலின் அளவு குறைவே
எனவே
கணையம் களைப்படையாமல் செயல்படுகிறது
-oOo-
ஒவ்வொரு ஊரின் குளமும் வெவ்வேறாக இருக்கும்
சில ஊர் குளங்களில் இருந்து 50 குடும்பங்களுக்கு மட்டுமே நீர் எடுக்க முடியும்
சில குளங்களில் இருந்து 100 குடும்பங்களுக்கு கூட எடுக்கலாம்
சில குளங்களில் ஊற்று நன்றாக இருந்தால் கோலா கம்பெனிக்கு கூட நீர் எடுக்கலாம்
-oOo-
ஒவ்வொருவருக்கும் கணையத்தின் செயல்பாடு மாறுபடும்
சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டாலே, அவர்களின் கணையத்தால் ஈடு கொடுக்க முடியாது
சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டால், அவர்களின் கணையம் சமாளிக்கும், அதிகம் சாப்பிட்டால் மட்டுமே பிரச்சனை
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் கணையம் சுரந்து கொண்டே இருக்கும்
-oOo-
இதில் முதல் வகையை Type 2 DM என்கிறோம்
இரண்டாவது வகை Impaired Glucose Tolerance என்கிறோம்
மூன்றாவது வகை - இவர்களுக்கு அவ்வளவு எளிதில் நீரிழிவு நோய் வருவதில்லை
smile emoticon smile emoticon smile emoticon