This Site is Intended to Discuss What to Eat and What not to Eat in Paleo Diet. A Diet which will help you reduce weight and control diseases like Type 2 Diabetes

If you are a layman and if you want to know more about Paleo diet from a Layman point of view, please visit Chennai Paleo Doctor

If you are interested in Scholarly Articles and Technical Journals about Science of Nutrition and Food, please see Paleo 4 Diabetes

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 50 மிகி/டெலி ஆக இருந்தால் கூட மயக்கம், படபடப்பு ஆகியவை ஏற்படாமல் இருப்பதற்கு காரணம்

குளுக்கோஸ் எப்படி சக்தி அளிக்கிறது ??
*********************************************

குளுக்கோஸ் முதலில் குளுக்கோஸ்-6-பாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது

குளுக்கோஸ்-6-பாஸ்பேட் பிறகு பிரக்டோஸ்-6-பாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது

பிரக்டோஸ்-6-பாஸ்பேட் பிறகு பிரக்டோஸ்-1,6-பைபாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது

இந்த பிரக்டோஸ்-1,6-பைபாஸ்பேட் இரண்டாக பிரிக்கப்படுகிறது
1. டைஹைட்ராக்சி அசிடோன் பாஸ்பேட்
2. கிளிசரால்டிஹைத் 3 பாஸ்பேட்

இவை இரண்டும் பல்வேறு மாற்றங்கள் அடைந்து பைருவேட் ஆக மாற்றப்படுகின்றன

-

இந்த பைருவேட் பிறகு அசிடைல் கோ ஏ ஆக மாற்றப்பட்டு, அது சிட்ரிக் அமில சுழற்சி மூலம் ஏடிபி உருவாக்கத்தில் முடிகிறது.

இந்த ஏ டி பி தான் சக்தி அளிக்கும் பொருள்

-oOo-

குளுகோஸ் மட்டுமே தேவைப்படும் செயல்பாடுகள் அல்லது குளுக்கோஸ் இல்லை என்றால் நின்று விடும் உயிர்வேதியல் செயல்பாடுகளுக்கு மட்டுமே குளுக்கோஸ் தேவை

பெரும்பாலான பிற செயல்பாடுகளை பொருத்தவரை அவைகளுக்கு ஏடிபி தான் முக்கியமே தவிர அந்த ஏடிபி குளுக்கோசில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது

சரி

இப்பொழுது நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்

உடலில் குளுக்கோஸ் அதிக அளவில் இல்லை என்றாலும் கூட கிளிசரால்டிஹைத் 3 பாஸ்பேடோ அல்லது வேறு இடைபொருட்களோ (metabolic intermediaries) இருந்தால் அவை பைருவேட் ஆக மாற்றப்பட்டு, உடலுக்கு தேவையான ஏடிபி கிடைத்துக்கொண்டே இருக்கும்



-oOo-

பேலியோவில் இருக்கும் போது
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 50 மிகி/டெலி ஆக இருந்தால் கூட
மயக்கம், படபடப்பு ஆகியவை ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் இது தான்










No comments:

Post a Comment