What to eat in Paleo
அசைவ பேலியோ டயட்டில்
என்னென்ன சாப்பிடலாம்?
Consult Online:
Online ConsultationPaleo Diet Consultant in Chennai : Consult in Person:
Please Fix Prior Appointments. -oOo- Mondays to Fridays 6:30-7:30 AM, 8-11 PM Saturdays and Sundays 6:30-8:30 AM, 7-11 PM Prime Indian Hospital, 1051, Periyar Salai (Poonamalle High Road), Arumbakkam, Opp to New Medical Council, Chennai - 600106. To Fix Appointments: Call 044 23639999, 9884493140 or Book Appointments Online at Practo -oOo- Mondays to Fridays 8-9 AM Saturdays and Sundays 9-11 AM GG Hospital, 6E, Nungambakkam High Road, Chennai - 600034. To Fix Appointments: Call 044 28272675, 28233160, 28277563, 28277694, 28271319 -oOo- Saturdays and Sundays 4-6 PM Chennai National Hospital, No 12, Jaffar Serang Street, Second Line Beach Road, Parrys, Chennai 600 001. To Fix Appointments: Call 044 66602222, 044 66602220
காலை
உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம்
எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
மதிய
உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம்.
முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.
மாலைச்
சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ
காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம்.
இரவு
உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில்
ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற
இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம்.
தவிர்க்கவேண்டிய
இறைச்சி வகைகள்:
கொழுப்பு அகற்றப்பட்ட
இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. (உதா: தோல் அகற்றப்பட்ட கோழி, மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன்). துரித உணவகங்களில் கிடைக்கும்
எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள்
சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
கருவாடு (மிதமான
அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம்).
முட்டையின் வெள்ளைக்
கருவை மட்டும் உண்பது தவிர்க்கப்படவேண்டும். மஞ்சள் கருவுடன் சேர்த்த முழு
முட்டையே உண்ணவேண்டும்.
எண்ணெயில் பொறிக்கப்பட்ட
இறைச்சியைத் தவிர்க்கவேண்டும்.
சைவர்களுக்கான
பேலியோ டயட்:
காலை - மதிய உணவுகளும், மாலைச் சிற்றுண்டியும் அசைவ டயட்டில் இருப்பது போல பாதாம், முட்டை போன்றவற்றை இதிலும் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக இறைச்சிக்குப்
பதிலாக பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதையும்
அளவு பாராது பசி அடங்கும் வரை உண்ணலாம்.
பேலியோவில்
தவிர்க்கவேண்டியவை:
உருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள்
அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி,
பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும் (அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப்பழம் தவிர்த்து)
என்ன, இதெல்லாம் தினமும் அல்லது அடிக்கடி உண்ணும் உணவுகள், இதை எப்படித் தவிர்ப்ப்பது என்று யோசிக்கிறீர்களா? உடல்நலனா அல்லது நம் விருப்பமா இரண்டில் எது முக்கியம் என
முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
பேலியோவில்
உண்ணக் கூடியவை:
காளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ், பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி
வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு,அவகாடோ (Avocado),புடலங்காய், இந்த
டயட்டில் அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியம் போன்ற
அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். பேக்கரிகளில், உணவகங்களில் விற்கப்படும் உணவுகள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதர குப்பை உணவுகள் என இவை அனைத்தையும்
அறவே தவிர்க்கவேண்டும். மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை உண்பதே நலம்.
சமையல் எண்ணெயாக நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய
தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாலடுக்கு ஆலிவ் ஆயில்
பயன்படுத்தலாம்.
இதுதான் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றைக்
குணப்படுத்தும் பொதுவான பேலியோ டயட். சைவர்கள், அசைவர்கள் என இருவரும் பின்பற்றலாம். வசதி உள்ளவர்கள் பாதாம்
சேர்க்கலாம், முடியாதவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். முட்டை
கூட சேர்க்காத சைவர்களும் முட்டைக்குப் பதில் பேலியோ காய்கறிகளை உண்டு பயனடைந்து
வருகிறார்கள்.
No comments:
Post a Comment